முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான, தொழிலதிபர் திருக்குமார் நடேசன், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்கு மூலம் வழங்கிய பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
உலகின் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், தனி நபர்கள், தொழிலதிபர்கள் போன்றோரின் இரகசியமாக சேர்க்கப்பட்ட சொத்து விபரங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய 'Pandora Papers' ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து சென்றுள்ளார்.
சர்ச்சைக்குரிய 'Pandora Papers' ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அது தொடர்பில் விசாரணைகள முன்னெடுக்குமாறு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியிரந்தார்.
இது தொர்பில் ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரான திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment