புதிய உலக சாதனையை நிலைநாட்டினார் பாபர் அசாம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

புதிய உலக சாதனையை நிலைநாட்டினார் பாபர் அசாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் ரி 20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையை நிலைநாட்டினார்.

20 க்கு 20 போட்டிகளில் வேகமாக, குறைந்த இன்னிங்ஸ்களில் (187 இன்னிங்ஸில்) 7,000 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் எனும் சாதனைக்கு இன்று பாபர் அசாம் சொந்தக்காரர் ஆனார்.

முன்னர் இந்த சாதனை கிரிஸ் கெயில் வசம் இருந்தது, கெயில் 192 இன்னிங்சில் 7000 ஓட்டங்களை தனதாக்கினார், கெயிலை விடவும் 5 இன்னிங்ஸ்கள் குறைவாக இந்த சாதனையை பாபர் அசாம் நிலைநாட்டி உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேநேரம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரமுமான விராட் கோலியை விடவும் 25 இன்னிங்ஸ்கள் முன்னதாகவே பாபர் அசாம் இந்த சாதனையை எட்டி உள்ளமை கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment