நிரந்த நியமனத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர்த்து அரசாங்கம் அதன் நெருக்கடியை மறைக்க பட்டதாரிகளை பயன்படுத்துகிறது - ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 21, 2021

நிரந்த நியமனத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர்த்து அரசாங்கம் அதன் நெருக்கடியை மறைக்க பட்டதாரிகளை பயன்படுத்துகிறது - ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்

(எம்.மனோசித்ரா)

பயிற்சிகளை நிறைவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர்த்து, அரசாங்கம் அதன் நெருக்கடியை மறைக்க பட்டதாரிகளை பயன்படுத்திக் கொள்கிறது. அதிபர் ஆசிரியர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது இழிவானதாகும் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயிற்சிகளை நிறைவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர்த்து, அரசாங்கம் அதன் நெருக்கடியை மறைக்க பட்டதாரிகளை பயன்படுத்திக் கொள்கிறது.

இதற்கு முன்னர் அரிசி, சீனி என்பவற்றின் விலைகள் தொடர்பான சர்ச்சையின் போது அவற்றுடன் தொடர்புடைய சேவைகளில் ஈடுபடுத்துவதற்காக பயிற்சி பெற்ற பட்டதாரிகள் நுகர்வோர் விவகார ஆணையகத்துடன் இணைக்கப்பட்டனர்.

தற்போது எவ்வித திட்டமிடலும் இன்றி பாடசாலைகளை திறப்பதாக அறிவித்து அந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய 200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் 5 முதல் 6 பயிற்சியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள் திறக்கப்பட்ட போது பெரும்பாலான பாடசாலைகளில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் மாத்திரமே சமூகமளித்திருந்தனர். ஆனால் சில பாடசாலைகளில் கதவுகள் மூடப்பட்டுள்ளன. அதிபர் ஆசிரியர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது இழிவானது.

இவ்வாறிருக்கையில் சில பிரதேச செயலாளர்கள் 2/2021(v) என்ற சுற்று நிரூபத்தை மீறி கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாரைக் கூட பாடசாலைகளுக்கு அழைத்துள்ளனர். இது மனித வளங்களை வீணடிக்கும் செயலாகும்.

தொடர்ச்சியாக இதேபோன்று செயற்பட்டால், பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment