பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது

பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் உட்பட 13 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதைப் பார்ட்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் தலைமையில் அதிகாரிகள் அந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.

கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. பார்ட்டியில் கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரிய வந்ததையடுத்து அதிகாரிகள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். 

இதில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப் பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் உட்பட 13 பேரை பிடித்தனர். பிடிபட்ட அனைவரிடமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில், ஷாருக்கான் மகன் ஆரியன்கானை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆரியன்கான் உட்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் பொலிவூட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment