இன்று நாட்டிலிருந்து உலகக் கிண்ணத்துக்காக புறப்படும் இலங்கை அணி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

இன்று நாட்டிலிருந்து உலகக் கிண்ணத்துக்காக புறப்படும் இலங்கை அணி

2021 டி-20 உலகக் கிண்ணம் மற்றும் ஓமானுடனான இரு போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தசூன் சானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இன்றையதினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை அணி, ஓமான் கிரிக்கெட் அணியுடன் இரு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி இலங்கை ஓமானுடன் தனது முதல் போட்டியை ஒக்டோபர் 07 ஆம் திகதியும், இரண்டாவது போட்டியை 09 ஆம் திகதியும் விளையாடுகிறது. போட்டிகளின் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கை அணி திரும்பும்.

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன், இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடும்.

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற போதிலும், இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை முழுமையாக இழந்தது.

இந்நிலையில் தோல்வியடைந்த மனநிலையுடன் உலகக் கிண்ணத்துக்கான கனவுடன் இன்றையதினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது இலங்கை அணி.

எனினும் தென்னாபிரிக்காவுடனான தொடரில் செய்த தவறுகளை சரி செய்து உலகக் கிண்ணத்துக்கான சவாலுக்கு தயாரா இருப்பதாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.

ஓமான் புறப்படுவதற்கு முன்னதாக இலங்கை அணி உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்ட ஒன்பது நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றது.

No comments:

Post a Comment