பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் : அரசாங்கத்தை பாதுகாத்து, ஒன்றிணைந்து செயற்படுவதே பிரதான இலக்கு - வீரசுமன வீரசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் : அரசாங்கத்தை பாதுகாத்து, ஒன்றிணைந்து செயற்படுவதே பிரதான இலக்கு - வீரசுமன வீரசிங்க

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு சிலரது கருத்துக்கள் கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் காணப்படுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில்அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பேச்சுவாரத்தை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கெரவலபிட்டிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகள் கடுiமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித தீர்வுமில்லாமல் நிறைவடைந்தது.

பங்காளிக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தையினை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் திகதி குறிப்பிடப்பட வில்லை.

காலதாமதப்படுத்தப்படுவது அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பங்காளிக் கட்சியின் உறுப்பினர்களுக்கு கிடையாது. அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றினைந்து செயற்படுகிறோம்.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சியினரது கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் ஒரு சிலரது கருத்துக்கள் கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன.

ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது பங்காளிக் கட்சியினர் ஒருமித்த வகையில் செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நோக்கம் பங்காளி கட்சியினருக்கு கிடையாது. அரசாங்கத்தை பாதுகாத்து தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவது பிரதான இலக்காகும் என்றார்.

No comments:

Post a Comment