பப்புவா நியு கினியாவில் உள்ள சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை அனுப்புவதை அவுஸ்திரேலியா நிறுத்தியுள்ளது.
படகுகளில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை கட்டணம் செலுத்திய இரு முகாம்களில் ஒன்றான பப்புவாவுக்கு அவுஸ்திரேலிய அனுப்பி வந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் பப்புவா நியு கினியாவுடன் மேற்கொண்ட ஏற்பாடுகள் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைவதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
எனினும் அந்த நாடு தனது கடல் கடந்த தடுப்பு நடவடிக்கையை தொடந்து முன்னெடுப்பதோடு தொலைதூர தீவு நாடான நாவுருவில் இருக்கும் தடுப்பு முகாமுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றனர்.
‘அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் இல்லை’ என்று உள் விவகார அமைச்சர் கரன் அன்ட்ரூஸ் நேற்றுத் தெரிவித்தார்.
இந்நிலையில் பப்புவாவில் தற்போது உள்ள 120 தஞ்சக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் அங்கேயே மீள் குடியேறுவதற்கு அல்லது நாவுரு தடுப்பு முகாமுக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment