இலங்கை அணியுடன் இன்று இணைகிறார் மஹேல - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

இலங்கை அணியுடன் இன்று இணைகிறார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்தன இன்று அபுதாபியில் இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார் மஹேல ஜெயவர்ன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே - ஆப்க்கான வாய்ப்பினை மும்பை அணி தவரவிட்டுள்ளதால், எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாகவே அவர் இலங்கை அணையுடன் இணையவுள்ளார்.

முன்னதாக ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 23 வரை 7 நாள் காலப்பகுதிக்கு இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்த்தன இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மஹேல ஜெயவர்த்தனவின் சேவையைப் பெறுவார்கள்.

No comments:

Post a Comment