ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த அரசாங்கப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்பொழுது கிழக்கு மாகாணத்தில் 588 பாடசாலைகள் முதற்கட்டமாகத் திறக்க வாய்ப்புள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளைநாயகம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி 423 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் 165 சிங்கள மொழி மூல பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதோடு பாடசாலை வளாகம் முழுமையாக துப்புரவு செய்யப்பட்ட பின்னர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment