ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வியாழக்கிழமை காலை (08.10.2021) மட்டக்களப்பு பார் வீதியில் சிறியரக கார் ஒன்றுடன் கனரக லொறி மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த கனரக லொறியைச் செலுத்தி வந்த சரதியியை தாம் தேடி வருவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்து லொறியையும் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்திற்குள்ளான காரின் முன்பக்கம் பலத்த சேதத்திற்கு உள்ளான நிலையில் கானப்படுகிறது. உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment