ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவி வரும் நிலையில் அவ்வெற்றிடங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலகத்தில் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மாவட்டத்தில் நிலவுகின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 18 பதிவாளர் பிரிவுகளுக்குமாக கிராமிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களுக்கான வெற்றிடங்கள் நிறப்பப்படவுள்ளதுடன், குறித்த நேர்முகத் தேர்வுகளில் மேலதிக காணிப் பதிவாளர் இ.ராகுலன் மற்றும் மாவட்ட சமுர்த்தி திணைக்கள கணக்காளர் எஸ்.எம்.பசீர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் தேர்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment