மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

தற்போது நாட்டில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்கு வரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வரையில் நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (08) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணிக் கூட்டத்தின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment