ஒரு சிறிய கூட்டம் விட்டுக் கொடுக்­கா­த­தால் தனியார் சட்ட விவ­கா­ரத்திற்கு கடந்த ஆட்­சி­யில் தீர்வு காண முடி­யாது போன­து : அலி சப்ரியை குறை சொல்ல முடி­யாது என்­கி­றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் - News View

Breaking

Monday, October 18, 2021

ஒரு சிறிய கூட்டம் விட்டுக் கொடுக்­கா­த­தால் தனியார் சட்ட விவ­கா­ரத்திற்கு கடந்த ஆட்­சி­யில் தீர்வு காண முடி­யாது போன­து : அலி சப்ரியை குறை சொல்ல முடி­யாது என்­கி­றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த கடந்த ஆட்­சியில் நாங்கள் நிறை­யவே முயற்சி செய்தோம். தலதா அத்­து­கோ­ரள நீதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது அவ­ரோடு நிறைய முரண்­பா­டுகள் தொடர்­பாக பேசி பல விட­யங்­க­ளுக்கு தீர்வு கண்டோம். ஒரு சிறிய கூட்டம் விதண்­டா­வா­த­மாக சில விட­யங்­களை விட்­டுக்­ கொ­டுக்­கா­ததால் இந்த விட­யத்­துக்­கான தீர்­வினைக் காண முடி­யாமல் போனது. இல்­லை­யென்றால் கடந்த ஆட்­சி­யி­லேயே இந்த விவ­காரம் நிறை­வுக்கு வந்­தி­ருக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

வீர­கே­ச­ரியின் ‘சம­காலம்’ அர­சியல் கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிடும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்கள் குறித்து தற்­போது எழுந்­துள்ள விமர்­ச­னங்கள் குறித்து கருத்து வெளி­யிட்ட போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நீதி­ய­மைச்சர் அலி சப்­ரிக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­களை நான் முழு­மை­யாக உணர்ந்து கொள்­கிறேன். இப்­ப­டி­யொரு ஆட்­சியில் ஒரு தனி இனத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­ச­ராக அவர் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­து­வது அவ­ருக்கு சிக்­க­லான ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. அவ­ருக்­காக நான் பச்­சா­தா­பப்­ப­டு­கின்றேன். ஒரு புரிந்­து­ணர்­வோடு நாங்கள் அவரைப் பார்க்க வேண்டும். அவரை ஒரு நெருப்புக் குழி­யினுள் தள்­ளி­விட முடி­யாது.

நாங்கள் ஒரு எதிர்க்­கட்சி என்ற வகையில் சம­யோ­சி­த­மாக செயற்­பட வேண்­டுமே தவிர எடுத்த எடுப்­பி­லேயே அலி சப்­ரியை குறை சொல்லி விட முடி­யாது. 

இந்த விட­யங்­களை சிவில் அமைப்­பு­க­ளுடன் கதைக்­கும்­போது தன்­னு­டைய விச­னத்தை தனிப்­பட்ட முறையில் அவர் வெளி­யிட்­டி­ருக்­கிறார். பொது­வெ­ளியில் அது­பற்றி பேச முடி­யாத நிலையில் அவர் இருக்­கிறார் என்­பதை புரிந்­து­கொண்டு இதற்­கான தீர்வை நாங்கள் காண வேண்டும்.

முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பான சர்ச்­சைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டிய அனைத்து கூட்­டங்­க­ளிலும் நாங்கள் கலந்து கொண்­டி­ருக்­கிறோம். 

கடந்த ஆட்­சியில் நாங்கள் நிறை­யவே முயற்சி செய்தோம். தலதா அத்­து­கோ­ரள நீதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது அவ­ரோடு நிறைய முரண்­பா­டுகள் தொடர்­பாக பேசி பல விட­யங்­க­ளுக்கு தீர்வு கண்டோம். ஒரு சிறிய கூட்டம் விதண்­டா­வா­த­மாக சில விட­யங்­களை விட்­டுக்­கொ­டுக்­கா­ததால் இந்த விட­யத்­துக்­கான தீர்­வினைக் காண முடி­யாமல் போனது. இல்­லை­யென்றால் கடந்த ஆட்­சி­யி­லேயே இந்த விவ­காரம் நிறை­வுக்கு வந்­தி­ருக்கும்.

திரு­மண வய­தெல்லை மற்றும் காதி நீதி­ப­தி­க­ளாக பெண்கள் நிய­மிக்­கப்­படல் என்­ப­வற்றில் அர்த்­த­மில்­லாமல் எதிர்ப்பு தெரி­வித்­ததே எங்­க­ளு­டைய இந்த நிலை­மைக்கு காரணம். இப்­போது இவை இரண்­டிற்­குமே உடன்­பாடு காணப்­பட்­டு­விட்­டது. 

முஸ்லிம் விவாக மற்றும் விகா­ரத்துச் சட்­டத்தை சீர்­தி­ருத்தும் பணி என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு என்று இருக்கின்ற அடிப்படை பொறிமுறைகளை இல்லாமல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆனால் நீதியமைச்சர் என்ற பதவிக்கு இருக்கின்ற வலிமையைக் குறைத்து அவ்வாறான செயற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment