ஐக்கிய தேசிய கட்சியின் நடைமுறை அரசியலுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி பாடநெறியொன்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசறிவியலில் பயிற்சியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றின் காரணமாக ஏற்பட்ட புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் தொழிநுட்பத்தை உபயோகித்து நடைமுறை அரசியலில் ஈடுபடுவதற்கு வழிகாட்டும் வகையில் இந்த பாடத்திட்டம் அமையும்.
இந்த பாடநெறிக்குள் இணைத்துக் கொள்வதற்கான இளைஞர் யுவதிகள் தொகுதி ரீதியில் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
இந்த வார இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் 75 வது ஆண்டு விழாவுடன் இணைந்து இணையவழி மாநாட்டுத் தொடரில் ஐந்து செயல்பாட்டு கருத்தரங்குகளும் நடத்தப்படும்.
இது தவிர இணைய வழியூடாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் இவ்வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment