தடுப்பூசி செலுத்தவில்லையா? சம்பளம் இல்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

தடுப்பூசி செலுத்தவில்லையா? சம்பளம் இல்லை

விமானம், ரயில் மற்றும் கப்பலில் பயணம் செய்ய தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும் என கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக அமுல்படுத்தியது. அங்கு கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அதேவேளையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக முன்னெடுக்கப்பட்டது. தடுப்பூசியை மக்கள் சீக்கிரமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, கனடாவில் தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் சம்பளமில்லாத விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

விமானம், ரயில் மற்றும் கப்பலில் பயணம் செய்ய தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும். ஓக்டோபர் 29ம் திகதிக்குள் ஊழியர்கள் முழுமையான தடுப்பூசியை செலுத்தி கொண்ட நிலையை ஓன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த பயண நடவடிக்கைகள், அரசு ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசி ஆகியவை உலகின் சில வலிமையானவை ஆகும். நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக, சுதந்திரத்தை பெற தகுதியானவர் என அவர் கூறினார்.

கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment