ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்
விவசாயிகள் சேதன பசளையை பயன்டுத்த வேண்டும் என அரசாங்கம் உடனடியாக தீர்மானம் எடுத்ததன் விளைவாகவே விவசாயிகள் பாதிக்கப்பட்டு, விவசாய பூமிகள் அழிவடைந்திருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும்போது நாட்டில் பாரிய உணவு தட்டுப்பாடு எற்படுவதுடன் பொருட்களின் விலையும் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்டிருக்கும் உரம் பிரச்சினை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், விவசாயத்துக்கு தேவையான உரத்தை கேட்டு விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வருவகின்றது. இந்த பிரச்சினை தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றது.
விவசாயத்துக்கு சேதன பசளை பயன்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு நாங்களும் ஆதரவு. ஆனால் இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக மேற்கொள்ளாமல் படிப்படியாகவே செய்திருக்க வேண்டும்.
இரசாயண உரத்தை தடை செய்ததால் விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு தேவையான உரம் இல்லாமல் போயிருக்கின்றது. அதனால் அவர்களின் விவசாய பயிர்கள் அழிவடைந்திருக்கின்றன. இதன் காரணமாக உற்பத்தியும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
அத்துடன் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் விவசாய அமைச்சர் மஹிந்தாந்த அளுத்கமகேயின் உருவ பொம்மைக்கு தீ வைக்கின்றனர். விவசாய அமைச்சரின் உருவ பொம்மைக்கு தீ வைப்பதில் பயனில்லை.
இந்த பிழையான தீர்மானத்தை மேற்கொண்ட ஜனாதிபதிகயே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். ஜனாதிபதியின் அவசர தீர்மானத்தால் அமைச்சர் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அத்துடன் விவசாயிகளுக்கான உரம் உரிய காலத்துக்கு கிடைக்காமல் இந்த நிலை தொடருமானால் எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும்போது நாட்டில் பாரிய உணவு தட்டுப்டாடு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதேபோன்று உணவுப் பாெருட்களின் விலையும் தற்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும்.
விவசாயம் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு அரசாங்கம் தெரிவிக்கும் பதில் என்ன.?
மேலும் உரப் பிரச்சினை தற்போது கழுத்துக்கு மேலால் சென்றிருக்கின்றது. விவசாயிகளுக்கு பதில் சொ்ால முடியாதநிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் தற்போது இந்தியாவில் இருந்து நைட்ரிஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்திருக்கின்றது. இந்த உரத்தை கொண்டுவருவதற்கு முன்னர் இதன் ஆராேக்கிய தன்மை குறித்து அரசாங்கம் பரீட்சத்து பார்க்கவில்லை.
அத்துடன் உரம் ஒன்றை கொண்டுவருவருவதற்கு முன்னர் அதுதொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இருக்கின்றன. இவை எதனையும் பின்பற்றாமலே அரசாங்கம் இந்தியாவில் இருந்து நைட்ரிஜன் திரவ உரத்தை கொண்டுவந்திருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment