இந்திய வெளியுறவு செயலாளர் குறைகளை தேடுவதற்காக நாட்டுக்கு வரவில்லை - அமைச்சர் நாமல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

இந்திய வெளியுறவு செயலாளர் குறைகளை தேடுவதற்காக நாட்டுக்கு வரவில்லை - அமைச்சர் நாமல்

(இராஜதுரை ஹஷான்)

பல நாடுகளில் இருந்து தற்போது இலங்கைக்கு பெரும்பாலானோர் வருகை தந்துள்ளனர். வருகை தந்து குறைகளை தேடி அலைபவர்களும் உள்ளனர். இந்திய வெளியுறவு செயலாளர் குறைகளை தேடுவதற்காக நாட்டுக்கு வரவில்லை. இரு தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் இவரது விஜயம் காணப்படுகிறது என இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுகிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து நாடுகளுடனும் ஒன்றினைந்து செயற்படுகிறோம். இந்தியா இலங்கைக்கு அயல்நாடு இரு நாட்டுக்குமிடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மத அடிப்படையில் நல்லுறவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகள் காணப்படுகின்றன. அவற்றை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பார்வையிடுவார்.

பல நாடுகளை சேர்ந்தோர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். வருகை தந்து குறைகளை தேடி அலைபவர்களும் உள்ளார்கள். இவ்வாறான காரணத்திற்காக இவர் நாட்டுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை காணப்படுகிறது.

நாட்டின் சுயாதீனத் தன்மையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் ஒன்றினைந்து செயற்படும் .எக்காரணிகளுக்காகவும் சுயாதீனத் தன்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம். தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment