மாகாண பயணத்தடை நீடித்தால் பஸ்களுக்கு விசேட அனுமதி - News View

Breaking

Tuesday, October 19, 2021

மாகாண பயணத்தடை நீடித்தால் பஸ்களுக்கு விசேட அனுமதி

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீடிக்கப்பட்டால், தொழில் புரியும் மக்களின் நலனுக்காக மாகாணங்களுக்கு இடையே பல பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 21 ஆம் திகதி மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், பஸ் சேவைகள் வழமை போல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லையெனின், வேலைக்குச் செல்வதற்கு சுகாதார அமைச்சின் விசேட அனுமதியின் கீழ் பல பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும்.

மக்கள் பயணம் செய்ய வேண்டும் மற்றும் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும். சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பணியிடங்களைத் திறந்த பின்னர் போக்கு வரத்து சேவைகளை முன்னெடுக்காமல் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment