அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) நியமனம் பெற்றுள்ளார்.
கடந்த 2025.08.30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய சபைக் கூட்டத்தில் எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கான (2025/2028) புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தற்போதைய யாப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் கடந்த 16.10.2025ஆம் திகதி கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். ரிஸ்வி (மஜீதி) பரிந்துரைக்கப்பட்டு நிறைவேற்றுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் ஒர் உறுப்பினராக கிழக்கு பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் நியமிக்கப்படும் இப்பொறுப்பானது ஓர் அமானிதமாகும் என்பதை மனத்தில் நிறுத்தி இந்நியமனத்தை ஏற்று, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பு மற்றும் மன்ஹஜ் ஆகியவற்றின் அடிப்படையில் ஜம்இய்யாவின் பணிகள் சிறப்பாக நடைபெற தாங்கள் பங்களிப்புச் செய்வீர்கள் என எதிர்பார்ப்பதாக ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment