அழிக்கப்பட்ட தரவுகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பம் - News View

Breaking

Sunday, October 3, 2021

அழிக்கப்பட்ட தரவுகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பம்

(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஔடதங்கள் உற்பத்தி ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள், குறித்த தரவுகளுக்கு பொறுப்பாக இருந்த எபிக் லங்கா நிறுவனத்தின் உள்ளேயே அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள போதும், அந்நிறுவனத்தை பொறுப்பில் இருந்து நீக்கப் போவதில்லை என ஔடதங்கள் உற்பத்தி ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment