வரவு செலவு திட்டத்தை பார்த்து மக்கள் ஆச்சரியமடைவார்கள் : மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது - அமைச்சர் ஜனக பண்டார - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

வரவு செலவு திட்டத்தை பார்த்து மக்கள் ஆச்சரியமடைவார்கள் : மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது - அமைச்சர் ஜனக பண்டார

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பார்த்து மக்கள் ஆச்சரியமடைவார்கள். அரசியல் வரலாற்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத வரவு செலவு திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்படும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பாதீடு ஊடாக தீர்வு வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் வரலாற்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை காட்டிலும் சிறந்த வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். வரவ செலவு திட்டத்தின் உள்ளடக்கங்களை கண்டு நாட்டு மக்கள் ஆச்சரியமடைவார்கள்.

வரவு செலவு திட்டம் பல சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. அதன் இரகசியத்தை குறிப்பிட முடியாது. வரவு செலவு திட்டத்தின் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு இம்முறை வழங்கப்படும்.

மாகாண சபைத் தேர்தலை தற்போது நடத்த முடியாது. அதற்கான சாத்தியமும் கிடையாது.மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு தேவையாயின் தேர்தலை நடத்திக் கொள்ளட்டும், நாங்கள் தேர்தலை தற்போது நடத்தமாட்டோம்.

தம்புள்ளை மாவட்ட மக்களின் காணிகளை பிற தரப்பினருக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.தேசிய வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. காடழிப்பு குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment