சுகாதார வழிகாட்டல்களை அலட்சியப்படுத்தினால் ஆபத்து : உலக நாடுகளில் மீண்டும் கொவிட் அதிகரிக்கிறது - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, October 17, 2021

சுகாதார வழிகாட்டல்களை அலட்சியப்படுத்தினால் ஆபத்து : உலக நாடுகளில் மீண்டும் கொவிட் அதிகரிக்கிறது - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் அவ்வாறு இடம்பெறாமல் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை வழிகாட்டல் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறினால் மீண்டும் ஆபத்து நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு தாம் அனைத்து மக்களுக்கும் தயவான வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் அறிவு மிக்கவர்கள் என்பதால் அவர்களுக்கு புதிதாக அது தொடர்பில் எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment