சரத் வீரசேகரவின் மிரட்டல்களுக்கு அடிபணியோம் - ஜோசப் ஸ்டாலின் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 17, 2021

சரத் வீரசேகரவின் மிரட்டல்களுக்கு அடிபணியோம் - ஜோசப் ஸ்டாலின்

அமைச்சர் சரத் வீரசேகர ஆசிரியர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு அறிக்கை விட்டுள்ளார். அவரது மிரட்டல்களுக்கு அடிபணியோம் என்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலத்தில் ஆசிரியர்கள் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டனர். வாகன அணிவகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் குழு கைது செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டதாகவும் ஆனாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த நாட்டில் கல்வி ஆசிரியர்களின் அதிபர்களின் போராட்டத்தால் பாதிக்கப்படவில்லை. ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் கல்வி நெருக்கடி ஏற்பட்டது என்று அரசாங்கம் கூறி, அவர்களின் திறமையின்மைக்கு அரசு ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுகிறது என்பத பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகத் தேர்வு முடிவுகள் தாமதமா? தேர்வுகள் நடத்த முடியாததற்கு ஆசிரியர்களின் போராட்டம் காரணமா? இவையெல்லாவற்றுக்கும் கொரோனா தொற்றே காரணம். நிகழ்நிலையில் கற்பித்தல். தேவைப்படும்போது எங்களது நியாயமான கோரிக்கைக்கு உடன்படாததும் இதற்குக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment