திங்கள் முதல் சாரதி அனுமதிப்பத்திர மருத்துவ சான்றிதழ் - News View

Breaking

Sunday, October 3, 2021

திங்கள் முதல் சாரதி அனுமதிப்பத்திர மருத்துவ சான்றிதழ்

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன சேவைகள் நாளை (04) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, அதன் தலைவர் வைத்தியர் சசீந்திர கமகே தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கு முன்பு அதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அவர் தெரிவித்தார்.

இதற்காக, www.ntmi.lk எனும் அதன் உத்தியோகபூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, echannelling இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக 225 எனும் இலக்கத்தின் ஊடாகவும், நிலையான தொலைபேசி ஊடாக 1225 எனும் இலக்கத்தின் ஊடாகவும் அதற்கான பதிவுகளை மேற்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment