பாடசாலைகளை திறக்கும் அரசாங்கத்தின் திட்டம் தோல்வி : ஆசிரியர், அதிபர்கள் படுமோசமானவர்கள் என்று விமர்சிப்பதில் தவறேதுமில்லை - News View

Breaking

Thursday, October 21, 2021

பாடசாலைகளை திறக்கும் அரசாங்கத்தின் திட்டம் தோல்வி : ஆசிரியர், அதிபர்கள் படுமோசமானவர்கள் என்று விமர்சிப்பதில் தவறேதுமில்லை

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை திறக்கும் அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் பாடசாலைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என ஒரு சில அதிபர், அதிபர் தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கள் முதல் பாடசாலைக்கு சமூகமளிக்கும் அதேவேளை தொழிற்சங்க போராட்டத்தை தொடரப்போவதாக சில தொழிற்சங்களும் தெரிவித்துள்ளது.

எனினும் பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிக்கும் திட்டம் முழுமையாக வெற்றி பெறாவிடினும், தோல்வியடையவில்லை. தொழிற்சங்கத்தினருக்கு பதிலடி வழங்கியுள்ளோம். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர்கள் படுமோசமானவர்கள் என்று விமர்சிப்பதில் தவறேதுமில்லை என பொதுஜன பெரமுன சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹதபான்கொட தெரிவித்தார்.

மாகாண கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் 3,800 பாடசாலைகள் இன்றைய தினம் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய திறக்கப்பட்டன. ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை குறைந்தளவில் காணப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கம்
தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளோம். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆசியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பார்கள். கடமையில் ஈடுபட்டவாறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.

எமது போராட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. பிரதேச அரசியல்வாதிகள் அரசியல் பலத்தை எமது போராட்டத்தில் பிரயோகிக்கிறார்கள். அழுத்தங்களுக்கு அடிபணிந்து போராட்டத்தை கைவிடப் போவதில்லை.

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை இடைநிறுத்தவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது. முறையற்ற வகையில் அரச தரப்பினர் செயற்பட்டால் எமது போராட்டம் தீவிரமடையும் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த அதிபர் சங்கம்
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டோம். எமது சங்கத்துடன் எட்டு ஆசிரியர் அதிபர் சங்கத்தினர் ஒனறிணைந்துள்ளனர். அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆகவே தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஒன்றினைந்த அதிபர் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்தார்.

அதிபர் இல்லாமல் பாடசாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு வலய கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன சேவை சங்கம்
200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்கும் திட்டம் முழுமையாக வெற்றி பெறாவிடினும்,திட்டம் வெற்றி பெறவில்லை. தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைக்கு செல்லபி போவதில்லை என்று பிடிவாதமாக செயற்பட்ட தொழிற்சங்கத்தினருக்கு தக்க பதிலடி வழங்கியுள்ளோம் என பொதுஜன பெரமுன சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹதபான்கொட தெரிவித்தார்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கம் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினருக்கு கிடையாது. அரசியல் நோக்கங்களுக்கு அமையவே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை படுமோசமானவர்கள் என்று குறிப்பிடுவதில் எவ்வித தவறுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி தொழிற்துறையினர் சங்கம்
எதிர்வரும் 25ஆம் திகதி எமது தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர், அதிபர்கள் எவரும் பாடசாலைக்கு சமுகமளிக்க மாட்டார்கள். தீர்வுக்கான போராடும் போராட்டத்தை ஒருபோதும் தற்காலிகமாகவாவது தளர்த்திக் கொள்ள மாட்டோம்.

அரசியல் வரப்பிரதாசங்களை பெற்றுக் கொண்டு ஒரு சில தரப்பினர் போராட்டத்தை காட்டிக் கொடுத்துள்ளார்கள். ஆகவே எமது தீரமானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என கல்வி தொழிற்துறையினர் சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment