மூன்றாவது வருடமாகவும் தேசிய ரீதியில் வெற்றி பெற்றது ஓட்டமாவடி தபாலகம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

மூன்றாவது வருடமாகவும் தேசிய ரீதியில் வெற்றி பெற்றது ஓட்டமாவடி தபாலகம்

றிபான் இஸ்மாயில் 

சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு இலங்கை அஞ்சல் தினைக்களம் வருடாந்தம் நடாத்தும் பாராட்டு பரிசளிப்பு நிகழ்வில் தொடர்சியாக மூண்றாவது வருடமாகவும் ஓட்டமாவடி தபாலகம் தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ளது.

ஒக்டோபர் 09 சர்வதேச அஞ்சல் தினத்தையொட்டி தினைக்களத்தின் ஊழியர்களை ஊக்கப்படுத்த வருடாந்தம் பாராட்டு நிகழ்வினை நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி அஞ்சல் அலுவலகம் இவ் வருடம் கூட்டுறவு 3ஆம் தர காப்புறுதி வழங்கும் பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் 2019 இல் சிறந்த அஞ்சல் அலுலகமாகவும் (சகல சேவைகளையும் உள்ளடக்கிய) பிரிவில் தேசிய ரீதியில் 3ஆம் இடத்தையும் காப்புறுதி வழங்கும் பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடமும் பெற்றுக் கொண்டுள்ளது.

அத்துடன் 2018ஆம் ஆண்டு கூட்டுறவு காப்புறுதி வழங்கும் பிரிவில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளதுடன் கடந்த ஆண்டு 2020 கொரோனா தொற்று காரனமாக தேசிய அஞ்சல் தின நிகழ்வு இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 3 வருடமாக தேசிய ரீதியில் சிறந்த அஞ்சல் அலுவலகமாக பல விருதுகள் பெற்று வரும் ஓட்டமாவடி அஞ்சல் அலுவகத்தின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றி வரும் அஞ்சல் அதிபர் எம்.டபிள்யு.எம். ஹபீல் அவர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment