கைவிடப்பட்ட கொள்கலனில் இருந்து 126 குடியேறிகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

கைவிடப்பட்ட கொள்கலனில் இருந்து 126 குடியேறிகள் மீட்பு

குவாத்தமாலா பொலிஸார் கைவிடப்பட்ட கொள்கலனிலிருந்து 126 அகதிகள் மற்றும் குடியேறிகளை காப்பாற்றியுள்ளனர்.

கப்பல் போக்கு வரத்தில் பயன்படுத்தப்படும் அந்தக் கொள்கலன் வீதியோரம் இருந்தது. சனிக்கிழமை (9) அதிகாலையில் நுயேவா கான்செப்சியோன் நகரின் எல்லையில் அந்தக் கொள்கலன் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 

கொள்கலனிலிருந்து மக்கள் அலறும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிலிருந்த பெரும்பாலானோர் ஹெய்டி நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் செல்ல கடத்தல்காரர்களிடம் பணம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. 

கடத்தல் காரகள் அகதிகளை ஏமாற்றி பாதி வழியிலேயே கைவிட்டதாகக் கூறப்படுகிறது. நேபாளம், கானா ஆகிய நாட்டினரும் அந்த கொள்கலனுக்குள் இருந்தனர்.

தற்போது அந்த அகதிகள் குவாத்தமாலா அரசாங்கத் தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகள் எங்கிருந்து வந்தனரோ அங்கு மீண்டும் அனுப்பப்படுவார்கள் என்று குவாத்தமாலா அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக அமெரிக்காவின் தெற்கு எல்லைக்கு அருகில் வைத்து மூன்று குளிரூட்டப்பட்ட கொள்கலன் டிரக் வண்டிகளுக்குள் சுமார் 350 சிறுவர்கள் உட்பட 652 குடியேறிகளை மெக்சிகோ நிர்வாகம் தடுத்த சம்பவம் இடம்பெற்ற ஒரு நாளைக்கு பின்னரே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment