சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி : அனுமதி கோரும் பைசர் - பயோஎன்டெக் - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி : அனுமதி கோரும் பைசர் - பயோஎன்டெக்

5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தங்களது கொரோனா தடுப்பூசியை செலுத்த பைசர் - பயோஎன்டெக் அனுமதி கோரியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ‘பைசர்’ நிறுவனமும், ஜேர்மன் நாட்டை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 5 முதல் 11 வயது சிறுவர்களுக்கு பரிசோதித்தது.

பெரியவர்களுக்கு கொடுப்பதில் மூன்றில் ஒரு பங்கு மருந்து மட்டுமே அவர்களுக்கு கொடுத்து பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அளவு மருந்தை 2 டோஸ் போட்டதற்கே சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தது.

12 வயதுக்கு மேற்பட்டவர்களைப்போல் வலிமையுடன் காணப்பட்டனர். அதே சமயத்தில் மற்ற இளம் வயதினரைப்போல், அவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்ற தற்காலிக பக்கவிளைவுகள் ஏற்பட்டன.

தற்போது அமெரிக்காவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு ‘பைசர்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பெரும்பாலான மேலை நாடுகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

இந்நிலையில் பைசர் - பயோஎன்டெக் தனது தடுப்பூசியை 5 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு அவசரகாலத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க அரசிடம் கோரியுள்ளது.

அமெரிக்க அரசானது இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விரைவில் இந்த தடுப்பூசியானது 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என ஏற்கனவே பெற்றோர்கள் அங்கு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment