(எம்.எம்.சில்வெஸ்டர்)
கட்டாரில் நடைபெற்ற 25 ஆவது ஆசிய மேசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்த இலங்கை மேசைப்பந்தாட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் நேற்றைய தினம் (7) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தாய் நாடு திரும்பிய இலங்கை மேசைப்பந்தாட்ட அணியினருக்கு இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கனக்க ஹேரத் மாலை அணிவித்து வரவேற்பளித்தார்.
இந்த சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த பெண்கள் அணியினர் 12 ஆவது இடத்தையும், ஆண்கள் அணியினர் 18 ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இது ஆசிய மேசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை அடைந்த அதிசிறந்த பெறுபேறாகும்.
இதில், பெண்களுக்கான தனி நபர் போட்டியில் பங்கேற்ற முத்துமாலி பிரியதர்ஷனி முதல் 16 இடங்களைப் பிடித்தவர்களின் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்.
இவரைத் தவிர செனூர சில்வா, பிமந்தி பண்டார, தனுஷி ரொட்றிகோ ஆகியோர் தனிநபர் பிரிவுகளில் 32 இடங்களை பிடித்தவர்களின் சுற்றில் விளையாடியிருந்தனர். இவை இலங்கை அணி பெற்ற சிறப்பான பெறுபேறுகளாகும்.
No comments:
Post a Comment