தலைமை அலுவலகத்தை இடமாற்றும் டெஸ்லா - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

தலைமை அலுவலகத்தை இடமாற்றும் டெஸ்லா

அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வரி விதிக்கப்படுவதாலும், வாழ்க்கைச் செலவு அதிகமுள்ளதாலும் ஆரக்கிள், எச்பி, டொயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் தலைமையகத்தை டெக்சாஸ் மாநிலத்துக்கு மாற்றி விட்டன.

அந்த வரிசையில் இப்போது டெஸ்லாவின் தலைமையகத்தை டெக்ஸாஸின் ஆஸ்டின் நகருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் ஆண்டுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

அங்கு கார், பேட்டரி ஆகியவற்றைத் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையை டெஸ்லா கட்டி வருவது குறிப்பிடத் தக்கது.

குறைந்த ஊதியத்துக்குத் தொழிலாளர்கள் கிடைப்பதும், கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதும் நிறுவனங்கள் தலைமையகத்தை டெக்ஸாஸிற்கு மாற்றக் காரணமாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment