பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது - பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

Breaking

Wednesday, October 13, 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக அரசியல் நோக்கம் நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றமை முற்றிலும் தவறானது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வருடத்தின் இறுதியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது சாத்தியமற்றது. அவ்வாறு உருவாக்கினாலும் அது முழுமையற்றதாக காணப்படும்.

அனைத்து இன மக்களின் அபிலாசைகளுக்கும் அமைய புதிய அரசியலமைப்பினை குறுகிய காலத்திற்குள் உருவாக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம், புதிய அரசியலமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment