வீட்டுக்கு அருகே வெள்ளை வேன் நடமாட்டங்கள் : துஷான் குணவர்தன பொலிஸில் முறைப்பாடு - News View

Breaking

Monday, October 11, 2021

வீட்டுக்கு அருகே வெள்ளை வேன் நடமாட்டங்கள் : துஷான் குணவர்தன பொலிஸில் முறைப்பாடு

(எம்.எப்.எம்.பஸீர்)

வெள்ளைப்பூண்டு மோசடி உள்ளிட்ட ச.தொ.ச. மோசடிகளை அம்பலப்படுத்திய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகர சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன, தனது வீட்டுக்கு அருகே வெள்ளை வேனில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவது தொடர்பில் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு பின்னால் உள்ள வீதியூடாக குறித்த சந்தேகத்துக்கு இடமான வெள்ளை வேன் வந்துள்ளதாக கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் அவர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த வெள்ளை வேனில் வந்த நபர் ஒருவர் வேனில் இருந்து இறங்கி, தனது வீட்டு இலக்கத்தை பரீட்சித்து விட்டு, 'இது தான் வீடு' என கூறிச் சென்றதாக, அதனை அவதானித்த அயலவர் ஒருவர் தனக்கு தெரிவித்ததாக துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சி.ஐ.டி.க்கு முறைப்பாடளித்தும் இதுவரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே குறித்த சந்தேகத்துக்கு இடமான வெள்ளை வேனின் நடமாட்டம் தொடர்பில் தான் முறையிடுவதாக துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment