மக்களே அவதானம் ! மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை : நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

மக்களே அவதானம் ! மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை : நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகியன பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

இதனால் மேல் கொத்மலை நீர்த் தேகத்தின் இரு வான் கதவுகளும், மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கெனியோன் நீர்த் தேக்கத்தில் ஒரு வான் கதவும், லக்ஷபான நீர்த் தேக்கத்தின் இரு வான் கதவும் இன்று (11) காலை திறக்கப்பட்டன.

காசல்ரீ நீர்த் தேக்க பகுதியில் இன்று காலை 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன.

இதனால் காசல்ரீ நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதேவேளை நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த் தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த் தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே நீர்த் தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment