பெலாரூஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரான்ஸ் தூதுவர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

பெலாரூஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரான்ஸ் தூதுவர்

பெலாரூஸ் நாட்டில் இருந்த பிரான்ஸ் தூதுவர் நிகோலஸ் டி லாகோஸ்டேவை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மின்ஸ்க் நகரில் இருந்து அவர் வெளியேறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நிகோலஸ் டி லாகோஸ்டே பெலாரஸ் நாட்டை விட்டு ஞாயிற்றுக்கிழமையே வெளியேறி விட்டதாக தூதரக செய்தித் தொடர்பாளர் ஏ.எஃப்.பி முகமையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

57 வயதான லாகோஸ்டே கடந்த ஆண்டுதான் அந்நாட்டில் தூதுவராக பணியமர்த்தப்பட்டார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தல் வெளிப்படையாக நியாயமாக நடத்தப்பட்டது என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் பெலாரூஸின் அதிபராக இருக்கும் லூகஷென்கோவின் ஆட்சி மீது பல தடைகளும் விதிக்கப்பட்டது. 

நிகோலஸ் டி லாகோஸ்டே தன் விவரங்களை அதிபர் அலெக்சாண்டர் லூகஷென்கோவிடம் காண்பிக்க மறுத்ததாக உள்ளூர் ஊடகங்களில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment