கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் : அடுத்த வாரம் முடிவு என்கிறது உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் : அடுத்த வாரம் முடிவு என்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார ஸ்தாபனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார ஸ்தாபனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதற்கிடையே, கோவேக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து ஓக்டோபர் 6ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

No comments:

Post a Comment