ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் உண்மை காரணி அரசியல் நோக்கிற்காக மறைக்கப்படுகிறது : இன்று நாட்டில் ஊழல் நிறைந்த நிர்வாக முறைமை தோற்றம் பெற்றுள்ளது - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் உண்மை காரணி அரசியல் நோக்கிற்காக மறைக்கப்படுகிறது : இன்று நாட்டில் ஊழல் நிறைந்த நிர்வாக முறைமை தோற்றம் பெற்றுள்ளது - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது. அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம், அரசியல் கொடுக்கல் வாங்கள் உள்ளிட்ட காரணிகளினால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இன்றைய சூழ்நிலையில் பல பொதுப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிக்கல்களை எதிர் கொண்டுள்ளார்கள். பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதனால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிள்ளைகளுக்கும், பெற்றோருக்குமிடையில் இதனால் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

வீண் விரயமாக்கப்படும் அரச நிதியை கொண்டு பாடசாலைகளை திறக்க முடியும். அதற்கான உரிய வழிமுறைகளும் உள்ளன. இருப்பினும் இவ்விடயம் குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.

இன்று நாட்டில் ஊழல் நிறைந்த நிர்வாக முறைமை தோற்றம் பெற்றுள்ளது. 70 வருட காலமாக ஊழல் நிறைந்த ஆட்சி முறைமையே தொடர்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீதி தமக்கு ஏற்றாட்போல் மாற்றப்பட்டுள்ளது. இதனால் நீதி, நியாயத்தை பெற்றுக் கொள்ள முடியாத சமூக முறைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் சட்டத்திற்கு புறம்பாகவே செயற்பட்டுள்ளன.இன்றும் இவ்வாறான நிலைமை இன்றும் காணப்படுகிறது.

சாதாரன நபர் நியாயத்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறை சமூகத்தில் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

தேவையான விதத்தில் சட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் உள்ளார்கள். இதனால் பெரும்பாலான நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வறுமை, ஏழ்மையை துரிதப்படுத்தும் வகையில் மாபியாக்கள் தற்போது அதிகம் தோற்றம் பெற்றுள்ளார்கள். இவ்வாறான ஊழலையும், முறைகேடுகளையும் கட்டுப்படுத்த எவருக்கும் முடியாதுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்கதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறை இல்லாமல் போயுள்ளது. இவ்விடயத்தில்அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் ஆகியவை காரணமாக நீதியை பெற முடியாதுள்ளது.அனைத்தையும் மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

குறுகிய நோக்கத்திற்காக மனசாட்சிக்கு விரோதமாக செயற்படக்கூடாது. அரசாங்கத்தின் தரப்பிலும்,ஆட்சியாளர் தரப்பிலும் இருந்துகொண்டு செயற்படவில்லை. மக்களுக்காகவே தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment