கறுப்பு பூஞ்சைக்கு முதலாவது மரணம் இலங்கையில் பதிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 23, 2021

கறுப்பு பூஞ்சைக்கு முதலாவது மரணம் இலங்கையில் பதிவு

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் முதன்முறையாக கறுப்பு பூஞ்சை நோயால் மரணமொன்று பதிவாகியுள்ளது.

காலி - கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கறுப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காலி - கராப்பிட்டி வைத்தியசாலையின் நீதிமன்ற மருத்துவ பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் ரொஹான் ருவன்புர தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் 56 வயதுடைய எல்பிட்டி சுகாதார மருத்துவ பிரிவில் வசித்து வந்தவராவார்.

கொவிட் நிமோனியால் பாதிக்கப்பட்டு மற்றும் கறுப்பு பூஞ்சை நோய்க்கும் உள்ளாகி உயிரிழந்த நபரொருவரின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றும் வைத்திய நிபுணர் ரொஹான் ருவன்புர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னரான விளைவுகளால் கரும்பூஞ்சை நோய் உண்டாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment