படப்பிடிப்புக்காக விண்வெளி நிலையத்திற்குபயணமான ரஷ்யா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

படப்பிடிப்புக்காக விண்வெளி நிலையத்திற்குபயணமான ரஷ்யா

சர்வதேச திரைத்துறையில் முதல்முறையாக விண்வெளி நிலையத்தில் ரஷ்ய கலைஞர்கள் சினிமா படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

இதற்காக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நடிகையுடன் செல்கின்றனர். 

ரஷ்ய மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ், நடிகை யூலியா பெரெசில்ட் (வயது 37), திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ (வயது 38) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (05) சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தனர்.

இவர்களில் பெரெசில்ட், ஷிபென்கோ ஆகியோர் ‘தி சேலஞ்ச்’ (சவால்) என்ற திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இங்கு நடத்துகின்றனர். 

அவர்கள் இதை வெற்றிகரமாக நடத்தி முடித்தால், சர்வதேச அளவில் முதல்முதலாக விண்வெளியில் சினிமா படப்பிடிப்புக்கான அரங்கு அமைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ரஷ்யா பெறும்.

விண்வெளி பயணிகள் 3 பேரும், கசகஸ்தானில் உள்ள பைகானூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்.எஸ்-19 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணித்தனர். 

இவர்கள் 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பார்கள். பணிகள் முடிந்த பின்பு வரும் 17ஆம் திகதி பூமிக்கு திரும்புவார்கள்.

No comments:

Post a Comment