சீனாவிற்கு எதிராக லண்டனில் போராட்டம் - News View

Breaking

Sunday, October 3, 2021

சீனாவிற்கு எதிராக லண்டனில் போராட்டம்

திபெத்திய ஹொங்கொங் சமூகத்தினர் மற்றும் உய்குர்கள் இணைந்து சீன மக்கள் கட்சிக்கு எதிராக லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

72 ஆண்டுகளுக்கு முன்பு சீன கம்யூனிஸ்ட் கட்சி மாவோ சேதுங்கின் சர்வாதிகாரத்தின் கீழ் திபெத் மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசு மீதான படையெடுப்பை அறிவித்திருந்தது.

கம்யூனிஸ்ட் ஆட்சியை போர்வையாக கெண்டு சாதாரண மக்களுக்கு எதிராக கடுமையாக துன்பங்களை ஏற்படுத்துவதாகவும் சர்வதிகார அடக்கு முறைக்குள் சிறைப்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளம் என்பவற்றையும் சீனா அழித்து வருவதாக குற்றம் சுமத்தினர்.

சீன ஆட்சியின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை கொள்கையால் பாதிக்கப்பட்ட திபெத்திய மற்றும் உய்கூர் மக்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளது.

கொல்டன் வீக் என்று அழைக்கப்படும் சீன வாரத்தில் மக்களுக்கு கொண்டாட எதுவும் இல்லை. இதே போன்றுதான் ஹொங்கொங் மக்களின் நிலைமையும்.

சீன - வுஹான் நகரில் வெடித்த கொரோனா வைரஸ் பரவல் இன்று முழு உலகையும் பெரும் அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது.

மறுபுறம் லடாக் எல்லையைக் கடக்கும் முயற்சியால் இந்தியாவுடன் சீனா மோதலில் உள்ளது. தெற்கு மங்கோலியர்கள் தங்கள் தனித்துவமான மொழி மற்றும் பௌத்த கலாச்சாரத்தை பராமரிக்க முடியாத நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

No comments:

Post a Comment