களுதாவளை பிரதேச சபை வருமானவரி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் ! காத்திருந்து கைது செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

களுதாவளை பிரதேச சபை வருமானவரி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் ! காத்திருந்து கைது செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, களுதாவளை பிரதேச சபையில் பணியாற்றும் வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச சபைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர், காரில் வந்த நபரொருபரிடம் குறித்த உத்தியோகத்தர் இலஞ்சத்தினை பெற்றபோது கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்திற்கு கொண்டு சென்று முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், எதிர்வரும் 18 ஆந் திகதி மேலதிக விசாரனைகளுக்காக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காணி ஒன்றில் வீடு கட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக அவரிடமிருந்து, 250,000 இலட்சம் கோரியதாகவும், ஏற்கனவே 25,000 பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இன்றையதினம் இரண்டாவது தடவையாக ரூபா 25,000 பணத்தை இலஞ்சமாக பெற்றபோதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

(கல்லடி  நிருபர்)

No comments:

Post a Comment