வெளி மாகாணத்திலி ருந்து நுவரெலியாவிற்கு வருபவர்களை திருப்பி அனுப்பவும் - மாவட்டச் செயலாளர் பொலிஸாருக்கு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

வெளி மாகாணத்திலி ருந்து நுவரெலியாவிற்கு வருபவர்களை திருப்பி அனுப்பவும் - மாவட்டச் செயலாளர் பொலிஸாருக்கு பணிப்பு

கொரோனா தொற்று காரணமாக மாகாணங்களுக்கிடையில் போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகவும் வேறு மாகாணங்களிலிருந்து நுவரெலியாவுக்கு வருகை தருவோரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு நுவரெலியா பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதமும் உயிரிழப்பு வீதமும் குறைவடைந்து வரும் இவ் வேளையில் வெளி மாகாணங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வருபவர்கள் மூலம் மீண்டும் தொற்று அதிகரிக்கலாம். ஆகையால் வெளி மாகாணங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முறைகளில் நுவரெலியாவுக்கு வருகை தருவதாகக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இங்கு வருபவர்களை திருப்பி அனுப்பும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மத்திய மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் நுவரெலியாவுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை தடுக்க வேண்டும் சாதாரண நாட்களை விட விடுமுறை நாட்களில் நுவரெலியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் அதனால் நுவரெலியாவில் காணப்படும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை சட்ட ரீதியில் நடத்துமாறும் அவற்றில் விருந்துபசார நிகழ்வுகளை நடத்த வேண்டாமென்றும் ஆலோசனை வழங்கியுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுவரெலியாவுக்கு வருகை தருவோர் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் கண்காணிக்குமாறு சுகாதாரத் தரப்பினருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தலவாக்கலை நிருபர்

No comments:

Post a Comment