மத்திய மாகாணத்தில் கடந்த 9 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

மத்திய மாகாணத்தில் கடந்த 9 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள்

மத்திய மாகாணத்தில் கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கடந்த 09 மாதங்களில் ஜனவரி மாதம் கண்டி மாவட்டத்தில் 67 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 12 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 5 பேரும் பதிவாகியுள்ளனர். பெப்ரவரி மாதம் கண்டி மாவட்டத்தில் 48 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 05 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 1 ஒருவரும் பதிவாகியுள்ளனர்.

மார்ச் மாதம் கண்டி மாவட்டத்தில் 51 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 08 பேரும் பதிவாகியுள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் கண்டி மாவட்டத்தில் 90 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 09 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 09 பேரும் பதிவாகியுள்ளனர்.

மே மாதம் கண்டி மாவட்டத்தில் 37 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 06 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 04 பேரும் பதிவாகியுள்ளனர்.

யூன் மாதம் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 17 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 04 பேரும் பதிவாகியுள்ளனர்.

யூலை மாதம் கண்டி மாவட்டத்தில் 129 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 58 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 05 பேரும் பதிவாகியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் கண்டி மாவட்டத்தில் 68 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 33 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 02 பேரும் பதிவாகியுள்ளனர்.

செப்டம்பர் மாதம் கண்டி மாவட்டத்தில் 32 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 06 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 03 பேரும் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய மொத்தமாக கண்டி மாவட்டத்தில் 562 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 157 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 40 பேரும் பதிவாகியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் வருடத்தின் முதல் 09 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் முதல் 09 மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல் 09 மாத காலத்தில் கண்டி மாவட்டத்தில் 3069 டெங்கு நோயாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 557 டெங்கு நோயாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 166 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை நிருபர்

No comments:

Post a Comment