பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதனால் வினைத்திறன் மிகுந்த பொலிஸ் சேவையை வழங்க முடியும் : அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதனால் வினைத்திறன் மிகுந்த பொலிஸ் சேவையை வழங்க முடியும் : அமைச்சர் சரத் வீரசேகர

பொலிஸ் திணைக்களத்தில் பதவிகளுக்கு நிலவி வருகின்ற பற்றாக்குறைகள் நன்கு இனம் காணப்பட்டு, 230 பேருக்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரியதொரு எண்ணிக்கையிலான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதனால் இலங்கையிலுள்ள 560 பொலிஸ் நிலையங்களை சிறப்பாகக் கண்காணிக்க முடியும். அதன் மூலம் பொலிஸ் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், வினைத்திறன் மிகுந்த சேவையையும் வழங்க முடியும். பொலிஸாரின் மன உறுதியையும் அதிரிக்க முடியும்.

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

‘2014 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் துறையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றியவர்களுக்கான பதவி உயர்வுகள் இடம்பெறவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நிலையினை சரி செய்து, பொலிசாருக்கு பதவி உயர்வுகள் வழங்கக் கூடிய சூழலை உருவாக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

பொலீஸ் திணைக்களத்திலுள்ள உதவி பொலீஸ் அத்தியட்சகர் வெற்றிடங்கள் அடையாளம் காணப்பட்டு 230 பேருக்கான பதவி உயர்வுகளை வழங்க முடிந்தது. 

அதற்கு மேலதிகமாக இன்னும் 46 பேர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாகப் பதவி உயர்வு பெறுவதற்கான சூழல் இருக்கின்றது. அவர்கள் தங்களது உயர் கல்வி, பட்டதாரி சான்றிதழ்களை சமர்ப்பித்து அதற்கான விசாரணைகளை நிறைவு செய்த பின்னர் குறித்த பதவியுயர்வுகளை வழங்க முடியும்’ என்றும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

‘பொலிஸ் திணைக்களத்தில் நிலவி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் வெற்றிடங்களினால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மூன்று அல்லது எட்டு பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் சூழ்நிலைக்கு ஆளாக வேண்டி ஏற்பட்டது. 

ஆனால் தற்போது இவ்வளவு பெரியதொரு எண்ணிக்கையிலான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதனால் இலங்கையிலுள்ள 560 பொலிஸ் நிலையங்களை சிறப்பாகக் கண்காணிக்க முடியும். அதன் மூலம் நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களின் செயல்திறனை அதிகரிப்பதுடன், வினைத்திறன் மிகுந்த சேவையினையும் வழங்க முடியும். பொலிஸார் மத்தியில் தங்களது சேவை தொடர்பான மனஉறுதியை அதிரிக்கச் செய்யவும் முடியும்’ என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

(ஒலுவில் மத்திய விசேட நிருபர் - றிசாத் ஏ. காதர்)

No comments:

Post a Comment