இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - News View

Breaking

Thursday, October 21, 2021

இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த நிகழ்வு இன்று (21) பதிவாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு கடந்து (21) 12.16 - 12.18 மணியளவில் தனியார் வைத்தியசாலையொன்றில் இப்பிரசவம் இடம்பெற்றுள்ளது.

அங்கொடை IDH பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.

மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இவ்வாறு பிறந்துள்ளன.

பேராசிரியர் டிரான் டயஸின் தலைமையிலான மருத்துவ குழுவினர் இப்பிரசவத்திற்கான மருத்துவத்தை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment