60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக "பூஸ்டர்" தடுப்பூசி : பரிந்துரைத்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக "பூஸ்டர்" தடுப்பூசி : பரிந்துரைத்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக செயலூட்டி (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை வழங்கியுள்ளது.

விசேடமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியை வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகள் செயலிழந்த வைரஸைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதுடன், பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வைரஸ் க்ரோமோசம்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு கொவிட் வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு க்ரோமோசம் தடுப்பூசியொன்றை செலுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் டெல்டா திரிபு தொற்று உறுதியாவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment