6 மணி நேர தடங்கலை சந்தித்த Facebook, WhatsApp, Instagram, Messenger : Twitter இற்கு படையெடுத்த பயனர்கள்; பல்வேறு கிண்டல்களும் கேலிகளும் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

6 மணி நேர தடங்கலை சந்தித்த Facebook, WhatsApp, Instagram, Messenger : Twitter இற்கு படையெடுத்த பயனர்கள்; பல்வேறு கிண்டல்களும் கேலிகளும்

சமூக ஊடக சேவைகளான Facebook, WhatsApp, Instagram, (Messenger) ஆகிய Facebook தாய் நிறுவன சேவைகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேர தடங்கலுக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக Facebook தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த சேவைகள், இணையம் ஊடாகவோ, ஸ்மார்ட்போன் செயலிகள் ஊடாகவோ சுமார் 6 மணி நேரமாக அணுக முடியாத நிலையில் காணப்படட்டன.

இது, இதுவரை கண்டிராத மிகப் பாரிய தடங்கல் என, Downdetector எனும், தடங்கல்களைக் கண்காணிக்கும் தளம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 10.6 மில்லியன் தடங்கல் தொடர்பில் தமது தளத்திற்கு பதிவிடப்பட்டதாக அத்தளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அதன் சேவைகள் அண்ணளவாக 16:00 GMT (பி.ப. 9.30) மணிக்கு செயலிழந்து, சுமார் 22:00 GMT (மு.ப. 3.30) மணிக்கு மீண்டும் அதனை அணுக முடிந்துள்ளது.

இறுதியாக பேஸ்புக்கில் இவ்வாறான ஒரு பின்னடைவு, கடந்த 2019 இல் ஏற்பட்டிருந்தது.

இந்த செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பேஸ்புக் தனது வருத்தத்தை ட்வீட் செய்துள்ளது.

பேஸ்புக்கின் சேவைகளை "100%" பெற சிறிது நேரம் ஆகலாமென, பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷ்ரோபர் தெரிவித்திருந்தார்.

இவை அனைத்திற்கும், தவறான உள்ளமைவு (configuration) மாற்றமே காரணமென நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, Facebook, WhatsApp, Instagram தளங்கள் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, Reddit, Twitter போன்ற தளங்களிலும், Telegram, Signal போன்ற செய்திப் பரிமாற்ற செயலிகளிலும் பயனர்கள் படையெடுத்திருந்ததோடு, பல்வேறு கேலிகள், நகைச்சுவையான பதிவுகளும் இடம்பெற்றிருந்ததோடு, அதில் Twitter உள்ளிட்ட பிரதான தளங்களே பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் பல்வேறு கிண்டல்களும், கேலிகளும் இடம்பெற்றிருந்தன.

பேஸ்புக் நிறுவனத்தைப் பற்றிய ஆவணங்களை கசியவிட்ட பேஸ்புக் நிறவன முன்னாள் பெண் ஊழியருடனான ஒரு நேர்காணலுக்கு அடுத்த நாள் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் அவர், ஒரு செனட் துணைக்குழு முன், 'சிறுவர்களை ஒன்லைனில் இருந்து பாதுகாத்தல்' எனும் தலைப்பில், இளம் பயனர்களின் மன ஆரோக்கியத்தில் இன்ஸ்டாகிராமின் விளைவு குறித்த பேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்ச்சி பற்றிய விசாரணைகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment