இலங்கை வருகிறது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

இலங்கை வருகிறது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ் (Ever Ace) என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

அந்த வகையில் எவர் ஏஸ் (Ever Ace) என்ற கப்பலானது இன்று (05.10.2021) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

எவர் ஏஸ் என்ற கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக் கொண்டு செல்லும் திறன்கொண்டது.

இந்தக் கப்பல் எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானதுடன் கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாளும் நடவடிக்கைக்கு இணைக்கப்பட்டது.

கடந்த மாதம் நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதேவேளை, தெற்காசியாவில் இவ்வாறு மிகப்பெரிய கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்கள் நங்கூரமிடக்கூடிய வசதியுடைய துறைமுகங்கள் உலகிலேயே 24 உள்ளன.

No comments:

Post a Comment