நீதியமைச்சின் டிஜிட்டல் கையொப்ப உபயோகம் : உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

நீதியமைச்சின் டிஜிட்டல் கையொப்ப உபயோகம் : உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அலி சப்ரி

நீதியமைச்சின் டிஜிட்டல் மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் கையொப்ப உபயோகம் நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் சட்ட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதத்தில் டிஜிட்டல் கையொப்பம் இட்டு உத்தியோகபூர்வமாக டிஜிட்டல் கையொப்ப முறையை ஆரம்பித்து வைத்தார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலையில் தூரப் பிரதேசங்களிலிருந்து கடமைகளை மேற்கொள்ளும்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை உபயோகித்து முறையாகவும் பயனுள்ளதாகவும் சிறந்த சேவையை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதே மேற்படி செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

டிஜிட்டல் கையொப்பமானது ISO 27001:2013 சர்வதேச தரத்துக்கு உட்பட்ட பாதுகாப்பானதும் இலகுவானதும் குறைந்த செலவைக் கொண்டதுமாகும் என்பதுடன் 2006 இலக்கம் 19 இலத்திரனியல் தொடர்புகள் சட்டத்தின்கீழ் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வாகும்.

எதிர்காலத்தில் நீதியமைச்சு மற்றும் நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டு சாதாரண மக்களுக்கு விரைவான சிறந்த ஆவணங்கள் மற்றும் கடிதங்களை ஒன்லைன் மூலம் பெற்றுக் கொடுக்க நீதியமைச்சு எதிர்பார்த்துள்ளது.

நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் நேற்றைய இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment