ஏறாவூர் ஆதார வவத்தியசாலையில் கொரோனா தொற்று காலத்தில் 450 பேர் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர் - வைத்தியர் டான் சௌந்தரராஜா - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

ஏறாவூர் ஆதார வவத்தியசாலையில் கொரோனா தொற்று காலத்தில் 450 பேர் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர் - வைத்தியர் டான் சௌந்தரராஜா

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்ட கடந்த இரு வருட காலப்பகுதியில் சுமார் 450 பேர் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக ஏறாவூர் ஆதார வவத்தியசாலை மனநலப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டான் சௌந்தரராஜா தெரிவித்தார்.

ஓக்ரோபெர் 10 உலக மனநல தினத்தை முன்னிட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மனநலப் பிரிவு மேற்கொண்டு வரும் சிகிச்சைப் பணிகளைப் பற்றி அவர் கருத்துத் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர், இன மத மொழிப் பிரச்சினைகளால் சின்னாபின்னப்பட்டுப்போயுள்ள மனித சமூகத்திற்கு மன நலம் தேவைப்படுகின்றது.

பொதுவாகவே நாட்டிலும் உலகெங்கிலும் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலியல் வேறுபாடுகள் காரணமாக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவைகளைக் கணிசமாககக் குறைக்க வேண்டும்.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் இயலுமான சேவைகளை நாம வழங்கி வருகின்றோம்.

தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

போதை என்பது சமூக நோயாகும் குடும்ப வன்முறைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கூடியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.

ஏனெனில் எல்லோருமே வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன.

சிறுவர்களின் மனநிலையும் கொரோனா முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் குணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

மதுவை நிறுத்துவதற்கான சிகிச்சைகளுடன் மருந்துகளையும் வழங்கி வருகின்றோம். சிறுவர்களுக்கான மனநல கிளினிக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இவற்றுக்குப் பதிலிறுக்கும் ஈடுபாடுகளையும் நாம் காட்டி வருகின்றோம். 2018ஆம் ஆண்டிலிருந்து இங்கு மனநல சிகிச்சைகள் இடம்பெறுகின்றன.

அதனடிப்படையில் கடந்த ஆண்டு 232 பேரும் இவ்வாண்டு ஒக்ரோபெர் மாதம் வரை 217 பேரும் எமது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் சிகிச்சைகளைப் பெற்றுள்ளார்கள். இவ்வாறு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் அதிகமானோர் பெண்களாகும்.

No comments:

Post a Comment