சீனாவில் 51 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த பஸ் : 13 பேர் பலி - News View

Breaking

Tuesday, October 12, 2021

சீனாவில் 51 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த பஸ் : 13 பேர் பலி

வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தின் ஷிஜியாஜுவாங் நகரத்தில் பிங்ஷான் கவுண்டியில் நேற்று திங்கட்கிழமை பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்துள்ளது.

அதில் இருந்த 51 பயணிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். 37 பேரை மீட்புப் படையினா் மீட்கப்பட்டுள்ளனர்.

அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அப்பகுதியில் 17 இலட்சத்து 60 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 1 இலட்சத்து 90 ஆயிரம் ஹெக்டயர் பயிா்கள் மழையால் சேதமடைந்துள்ளன. சுமார் 779 மில்லியன் டொலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாகாணத்தில் உள்ள பிங்யாவோ நகரத்தில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுவா் உள்ளது. மழையால் அதில் 25 மீட்டா் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment